தனக்கு வரப் போகும் கணவர் தெலுங்கு பேசுபவராக, 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று இளம் நடிகை கூறுவதை கேட்டு அவர் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

வட நாட்டை சேர்ந்த நடிகை ஒருவர் ஹைதராபாத்தில் செட்டிலாகி தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ராசியில்லாத நடிகை என்று பெயர் எடுத்தார்.  தற்போது தான் அவர் நடித்த தமிழ் படங்கள் ஓடத் துவங்கியுள்ளன.

இந்நிலையில் அவர் திருமணம் செய்தால் தெலுங்கு பேசும் நபரை திருமணம் செய்ய வேண்டும். அதுவும் அந்த நபர் 6 அடி உயரம் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். அவரும், 6 அடிக்கு மேல் இருக்கும் தெலுங்கு நடிகரும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.

இந்நிலையில் நடிகை கூறி வரும் விபரம் அந்த நடிகருக்கு தான் நச்சென்று பொருந்துகிறது. நடிகரை மனதில் வைத்து தான் நடிகை அப்படி கூறி வருகிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனால் நடிகையோ அந்த நடிகர் தனது நல்ல நண்பர் மட்டுமே என்கிறார்.