வறட்சியுடனான வானிலையால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 26 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம்7 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீரியல் திணைக்கள நீர்முகாமைத்துவத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.

நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் சிறுபோக செய்கைக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வறட்சியுடனான வானிலையால் மஹாவெலி வலயத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மஹாவெலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 வீதம் வரை குறைவடைந்துள்ளதுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 15 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.