வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நீண்டநாட்களாக எதிர்பார்த்த நோட்டிஃபிக்கேஷன்களின் வழியாகவே நேரடியாக வாய்ஸ் மெசேஜை முன்னோட்டமிட உதவும் அம்சத்தை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

வாட்ஸ்ஆப் கொண்டு வந்த இந்த புதிய அம்சம் டெஸ்ட் ஃப்ளைட்டின் ஒரு பகுதியாக 2.19.91.1 பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஐஒஎஸ்(iOS) ஆப்பிள் போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆடியோ பிளேபேக் அம்சம் பொறுத்தவலை வாட்ஸ்ஆப் ஐஒடிஎஸ் சாதனங்களில் மெசேஜ் மற்றும் ஆடியோ கோப்புகளை இயக்க அனுமதிகக்கும், பின்பு வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள ஆடியோ பிளேபேக் அம்சத்திற்கு உங்களால் டெக்ஸ்ட் ரிப்ளை மட்டுமே; செய்ய முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வாய்ஸ் ரிப்ளை செய்ய முடியாது. பயனர்கள் இதற்கு வாட்ஸ்ஆப்பை திறந்து தான் அதை நகழ்த்த முடியும்.