வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

இத்தகைய வாட்ஸ்ஆப் என்பது வெறும் செயலியாக இல்லாமல், நமது போன் மூலம் பல ஆபத்துகளையும் விளைவிக்க கூடியதாக உள்ளது என்பது தான் உண்மை.

இப்போது புதிதாக ஒரு பிரச்சணை வந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்க், இந்த லிங்க் பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகமாக பரவி வருகிறது, இது பெரும் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

வாட்ஸ்ஆப் கோல்டு என்ற அப்டேட் லிங்கை- அப்டேட் செய்தால் நாம் தனிச்சிறப்புகள் வசதிகள் போன்ற பலவற்றை வாட்ஸ்ஆப்பில் பெறமுடியும் என்ற வாசகமும் அனுப்பப்படுகிறது. இந்த லிங்க் மூலம் அப்டேட் செய்ய முயற்சிக்கும்
நபர்களின் செல்போன்களில் வைரஸ்கள் அதிகளவு ஊடுறுவுகின்றன.

இந்த வைரஸ் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் உரையாடல்களை கண்காணிக்க முடியும், பின்பு தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் கொண்டு நீங்க மிரட்டப்படலாம். பின்ப வங்கி சார்ந்த தகவல்களையும் இந்த வைரஸ் திருடும் என்பது குறிப்பிடத்தக்கது,எனவே இதை தவிர்ப்பது மிக மிக நல்லது.