டெல்லி: ராம்தேவ் பதஞ்சலியின் ‘கிம்போ’, கூகுள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மெசேஜ் அனுப்ப உதவும் மொபைல் செயலிகளில் முன்னணியில் இருப்பது ‘வாட்ஸ்-அப்’. இதேபோன்று மெசேஜ் அனுப்பும் செயலியை, யோகா குரு ராம்தேவ் பதஞ்சலி அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘கிம்போ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் வெளியிடப்பட்ட இந்த செயலி, இன்று காலை முதல் கூகுள் ஸ்டோரில் இருந்து மாயமாகியுள்ளது. ஆனால் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் மட்டும் காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பேசிய சைபர் மீடியா ஆராய்ச்சி மைய தலைமை செயலர் ஃபைசல் கவூசா, வாட்ஸ்-அப் போன்ற ஒரு இடத்தைப் பிடிப்பது கிம்போவால் இயலாத காரியம். இதுவரை 5,000 டவுன்லோடுகள் மட்டுமே நடைபெற்றுள்ளது.

பயன்பாட்டில் ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன. இருப்பினும் தகவல்தொடர்பில் பதஞ்சலி தீவிரம் காட்டி வருகிறது என்று கவூசா தெரிவித்தார்.

முன்னதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்த பதஞ்சலி நிறுவன செய்தித் தொடர்பாளர் டிஜரவாலா, பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து ஸ்வதேசி சம்ரித்தி சிம் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து கிம்போ மெசெஞ்சர் செயலி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எங்களுக்கு வாட்ஸ்-அப் ஒன்றே போட்டியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.