பாக்கியநாதன் அந்தோனி பிள்ளை ஐயாவில் கதை

மன்னார் நகர் நிருபர்

09.18.2019

பாக்யநாதன் அந்தோனிபிள்ளை எல்லோரையும் போல் சாதாரணமாக கடந்து போக வேண்டிய ஒரு மீன் வியாபாரி இல்லை 65 வயதாகியும் அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு என 60 கிலோ மீற்றருக்கு மேல் தினமும் சைக்கிளில் சென்று வாழ்வாதாரத்தை நடத்தும் ஒரு இரும்பு மனிதன்

மன்னார் விடத்தல் தீவில் பிறந்த பாக்யநாதன் அந்தோனி ஐயா தற்போது இடம் பெயர்ந்து தோட்டவெளி பகுதியில் வசித்துவருகின்றார்

தினமும் காலை 7 மணிக்கு மன்னார் பாலத்தில் சாதரனமாக சைக்கிளில் காணக்கூடிய பாக்கியனாதனின் பயணம் அவ்வளவு இலகுவானது இல்லை

குடும்பத்தின் சுமை, பொருளாதர நெருக்கடி, விலைவாசி அதிகரிப்பினாள் அவருடைய 50 வயதில் மன்னார் தீவக பகுதியில் உள்ள மீன் பிடிப்பாளர்களிடம் இருந்து நடுத்தர அளவில் மீன்களை கொள்வனவு செய்து தீவிற்கு அப்பால் உள்ள பகுதிகளான ஆத்திகுழி ,மாவிலங்கேணி, அளவாக்கை, புதுவெளி இலந்த மோட்டை, முருங்கன் பிட்டி ,முருங்கன், கற்கடந்தகுளம், நானாட்டான் என நீண்டு கொண்டே செல்கின்றது இத்தனை பகுதிகளிலும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அந்தோனி

மன்னாரில் இருந்து காலை 5 மணிக்கு தனது தொழிலை ஆரம்பிக்கும் அந்தோனி பிரதான பாதை ஊடாகவும் காட்டுப் பாதை சிறு உள்ளக வீதிகாள் என அனைத்து இடங்களிக்கும் சென்று மாலை 5 மணிக்கு தொழில் முடியும் போது அவருடைய வருமானம் 300-400 ஆகவே காணப்படுகின்றது

தள்ளாடும் வயதில் தள்ளாடி கொண்டே சைக்கிளில் செல்லும் அந்தோனி ஐயாவின் சிரிப்பில் எந்த ஒரு தள்ளாட்டமும் இல்லை

அண்மைக்காலமாக முதுமை ஒரு புறம் தன்னை தளர்வடைய செய்தாலும் உள்ளூர்பகுதிகளில் மீன்வியாபாரத்தில் ஈடுபடும் சக தொழிலாலர்கள் மோட்டார் சைக்கிளில் மீன்வியாபாரத்தில் ஈடுபடுவதனால் நான் சைக்கிளில் பல பகுதிக்கு செல்ல முதலே அவர்கள் வியாபாரத்தை முடித்து விடுகின்றனர் அதனால் பல மைல் தூரம் சைக்கிளில் சென்றும் நான் சில நேரங்களில் வெறும் கைகளுடன் வருவதும் உண்டு என தெரிவிக்கின்றார்

ஆனாலும் சில கிராம பகுதிகளில் எனக்கு என சில மக்கள் யாரிடமும் மீன் வாங்காமல் காத்திருப்பார்கள் அவர்களால் நான் நம்பிக்கையாய் பயணிக்கின்றேன் என்று தெரிவிக்கின்றார் அந்தோனி எத்தனை வயதானாலும் என்னால் ஓட முடியும் ஆனால் எனக்காக காத்திருக்கும் சிலருக்காக நான் நேரத்திற்கு அவ் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசையே எனக்கு உள்ளது எனவும் அதற்காக ஒரு சாதாரண மோட்டார் வண்டி வாங்க பணம் சேர்க கூட எனது தொழிலில் பணம் மீதம் ஆவதில்லை என புண்ணகை கலந்த சிரிப்புடன் கூறி பயணத்தை தொடர்கிறார் அந்தோனி ஐயா

எமது பிறப்பே சில நேரங்களில் எமது ஆசைகளை தீர்மானிக்கின்றது எத்தனை ஆசைகள் இருந்தாலும் சிலரது வாழ்கை கனவாகவே கலைந்து போகின்றது