கொழும்பு, களுத்துறை, கண்டி, கம்பஹா, மாத்தறை, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இம்மாதம் 31 ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது காணப்படும் டெங்கு அவதான நிலையை கட்டுப்படுத்துவதற்காக இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.