நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது,

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நிகழ்வில் கருத்து வெளியிட்டமை தொடர்பாக அவர் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னரே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.