‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றியை அடுத்து தற்போது விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்துள்ளனர். இது விஜய்யின் 63வது படமாகும். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.

படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தில் ‘மேயாத மான்’ படத்தில் நடித்த நாயகி இந்துஜாவும் இணைந்து நடிக்கவுள்ளார். தற்போது அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் வருகிற தீபாவளியன்று திரைக்கு வருகிறது.