விஷால் ராணுவ வீரராக நடித்து வெளியான இரும்புத்திரை படத்தின் 2ம் பாகம் உறுதி செய்யப்பட்டு படப்பிடிப்பு நடக்கின்றது. தற்போது அவர் நடித்த துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2017ல் வெளியான ’துப்பறிவாளன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ஏகோபித்த ஆதரவை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலுக்கு அது வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து பிஎஸ் மித்திரன் இயக்கத்தில் உருவான இரும்புத்திரை திரைப்படமும் சிறப்பான வரவேற்பு பெற்றது. இதனால் இரும்புத்திரை படத்தின் 2வது பாகம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு தயாராகி வருகின்றது.

இந்நிலையில் விஷால் – மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2 படம் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.