விராட் கோஹ்லியின் அதிரடியால் 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 3 ஓவரில் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

டிம் சவுத்தி வீசிய 4-வது ஓவரில் கிறிஸ் கெய்ல் 3 பவுண்டரி விரட்டினார். இனிமேல் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 5-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார்.

இந்த ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அத்துடன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய கேஎல் ராகுல்(21) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல்(18) ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெய்ல் அவுட்டாகும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 15.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 88 ஓட்டங்களில் சுருண்டது.

கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல்-ஐ தவிர்த்து பிஞ்ச் (26) மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தார்.

3 பேர் ரன்அவுட் மூலம் வெளியேறினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடியது.

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் பர்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர்.

இதனால் 8.1 ஓவர்களிலேயே பெங்களூர் அணி 92 ஓட்டங்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

28 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி 48 ஓட்டங்கள் குவித்தார். பார்தீவ் பட்டேல் 22 பந்துகளை சந்தித்து 40 ஓட்டங்கள் குவித்தார்.

Indore: Mohammed Siraj of Royal Challengers Bangalore celebrates fall of Karun Nair’s wicket during an IPL 2018 match between Kings XI Punjab and Royal Challengers Bangalore at Holkar Cricket Stadium in Indore, on May 14, 2018. (Photo: IANS)