நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள வைஃபை பாஸ்வேர்டை மாற்றிவிட்டீர்களா? அல்லது உங்களது வைஃபை இன்ஸ்டால் செய்யும்போது இருந்த பாஸ்வேர்டு தான் இப்போதும் உள்ளதா? வீட்டில் ஏதாவ்து விசேஷம் அல்லது பார்ட்டி நடக்கும்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம். இதன் மூலம் உங்கள் வைஃபை கனெக்சனை மற்றவர்கள் தவறாக பயனப்டுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் இண்டர்நெட் வேகம் குறையும், உங்களது மாத லிமிட் இண்டர்நெட் டேட்டா விரைவில் குறையவும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சனைகளையெல்லாம் தவிர்க்க நீங்கள் அவ்வப்போது உங்களது வைஃபை பாஸ்வேர்டை மாற்றி கொள்வது ஒன்றே சரியான தீர்வாகும். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வைஃபை பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1. வைபை பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றுங்கள்

ஒரு சிலருக்கு வைஃபை என்பது மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்று அத்தியாசவனமான ஒன்றாக இருக்கும். பெரும்பாலான இண்டர்நெட் நிறுவனங்கள் வைஃபை மோடத்தை ஒரு மூலையிஉல் யாரும் தொட முடியாத இடத்தில் தான் வைப்பார்கள். இங்கு வீட்டில் வைஃபை வைத்திருப்பவர்கள் சந்திக்கும் சில முக்கிய பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்

2. வீட்டின் மையத்தில் வைஃபை மோடம் இருக்க வேண்டும்

வைஃபை கவரேஜ் வீட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தங்கு தடையின்றி வரவேண்டும் என்றால் மோடத்தை வீட்டின் மையப்பகுதியில் வைக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் வீட்டின் ஒரு மூலையில் அல்லது ஜன்னல் அருகே மோடம் அல்லது ரூட்டரை வைத்துவிடுவார்கள். குறைந்த அளவு வயர் செலவாகும் என்ற எண்ணத்தில் இவ்வாறு வைத்துவிட்டு செல்வதல் இண்டர்நெட் வேகம் குறைவது மட்டுமின்றி அவ்வப்போது இண்டர்நெட் கட் ஆகவும் வாய்ப்பு உண்டு. அதனால்தான் வீட்டின் மையத்தில் ரூட்டரை வைத்தால், வீட்டின் அனைத்து பகுதிகளிலும் இண்டர்நெட் சம அளவில் கிடைக்கும். மேலும் ரூட்டரை முடிந்த அளவு கொஞ்சம் உயரமான இடத்தில் வைக்கவும், அது இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும். அதேபோல் ருட்டரை கார்ட்லெஸ் போன், மற்ற ரூட்டர்கள், பிரிண்டர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் ஆகியவற்றின் அருகில் வைக்காமல் இருக்க வேண்டும்

3. பயன்படுத்தும் உபகரணங்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்கும்போது விருந்தாளியாக வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரைமரி வைஃபை பாஸ்வேர்டை கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு என்று எளிய ஒரு தற்காலிக பாஸ்வேர்டை கிரியேட் செய்து கொடுக்கவும். இதற்கு உங்கள் ருட்டர் அட்மின் செட்டிங் சென்று அதில் உள்ள வயர்லெஸ் டேப் என்பதை கிளிக் செய்தால் அதில் கெஸ்ட் நெட்வொர்க் என்ற ஆப்சன் இருக்கும். அதில் பாஸ்வேர்ட் செட் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரே நேரத்தில் அதிக நபர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதும் அல்லது. ஒருசில ரூட்டர்களில் பிளாக் அண்ட் ரிமுவ் என்ற ஆப்சன் இருக்கும். விசேஷம் முடிந்தவுடன் அதில் தேவையில்லாத உபகரணங்கள் இருந்தால் அதை ரிமூவ் செய்துவிடவும். அதேபோல் பார்ட்டி முடிந்தவுடன் கெஸ்ட் நெட்வொர்க்கை டிஸேபிள் செய்துவிட வேண்டும். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இதனால் உங்கள் இண்டர்நெட் டேட்டா காப்பாற்றப்படும்

4. ரிப்பீட்டர் பயன்படுத்துங்கள்

நீங்கள் ஒரு அறையில் அல்லது ஸ்டூடியோ அபார்ட்மெண்டில் வசிக்காமல் இருந்தால் உங்கள் ஐஎஸ்பி இண்டர்நெட்டை வீடு முழுவதும் வழங்காது. எனவே இதற்காக நீங்கள் இன்னும் சக்திவாய்ந்த ஒரு ரூட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும். இருப்பினும் இதற்கு ஒரு எளிதான வழி என்னவெனில் ரிப்பீட்டரை பயன்படுத்துவது. இந்த ரிப்பீட்டர் உங்கள் வைஃபையை வீடு முழுவதும் கிடைக்க உதவி செய்யும். டபிள்யூ.பி.எஸ் என்ற முறை ரிப்பீட்டரில் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. டபிள்யூ.பி.எஸ் எனேபிள் செய்து அதன் பட்டனை கிளிக் செய்தால் ரிப்பீடர் ஆன் ஆகிவிடும். அதுமட்டுமின்றி அனைத்து ஆட்டோமெட்டிக்காக ஒருசில நிமிடங்களில் இண்டர்நெட் சிக்னல் பிரச்சனையை சரிசெய்துவிடும். அதேபோல் டி-லிங்க், நெட்கியர், டிபி-லிங் போன்ற பல ரிப்பீட்டர்கள் ரூ.1000 விலையில் சந்தையில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீங்கள் பழைய மாடல் ரூட்டரை பயன்படுத்துபவராக இருந்தாலும் இந்த ரிப்பீட்டர் முலம் நல்ல சிக்னலை பெறலாம்.

5. யூஎஸ்பி ரூட்டரை பயன்படுத்துங்கள்

ரூட்டரின் போர்ட்டிலும் உங்கள் கவனம் சிறிது இருக்க வேண்டும். உங்கள் ரூட்டரில் யூஎஸ்பி போர்ட் இருந்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிக்னல் அளவு அதிகமாக இருக்கும். உங்களது ரூட்டரின் மாடலை பொருத்து வைபையை கனெக்ட் செய்யும் யூஎஸ்பி போர்ட் இருக்கும். அதன்மூலம் நீங்கள் கூடுதலான டிவைஸ்களில் வைபையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பிரிண்டரில் கனெக்ட் செய்வதற்கும் இந்த யூஎஸ்பி உங்களுக்கு உதவும்,