மனித உடல் பலவித மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆதிகாலம் முதலே மனித இனம் மிக பெரிய அளவில் பரிணாமம் அடைந்துள்ளது. மனித உடலானது பெரும்பாலும் ரத்தினால் உருவானது. இப்படிப்பட்ட இந்த உன்னதமான ரத்தம் 3 முக்கிய பொருளால் உருவானது. சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளாட்டிலேட்ஸ் முதலியவை தான் இதன் 3 முக்கிய அங்கங்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கூட உடலில் பலவித நோய்கள் உண்டாகும். உடலில் உருவாக கூடிய எந்த வகை நோயாக இருந்தாலும் அதை கண்டறியவும், குணப்படுத்தவும் இரத்தம் மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் உடலில் இருக்க கூடிய நோய்களை கண்டறிய இரத்தத்தின் 2 துளிகள் போதும். வெறும் 2 துளி இரத்தத்தை வைத்து எப்படிப்பட்ட நோய்களை எல்லாம் கண்டறிய இயலும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

சிறுநீரகத்தில் உள்ள கிரியாட்டினின் அளவு பெண்களுக்கு 1.2 அளவுக்கு மேலாகவும், ஆண்களுக்கு 1.4 அளவுக்கு மேலாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு இல்லையெனில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும். 2 துளி இரத்தத்தில் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை கண்டறிய இயலும்.

இந்த வகை இரத்த பரிசோதனையில் ஒரு சில உண்மைகள் தெரிய வரும். அதாவது, மிக எளிதாக உங்களின் வயதை கண்டறிந்து விடலாம். எதற்ச்சையாக ஒருவர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரின் வயதை பொருத்து சிகிச்சை அளிக்கப்படும். இது போன்ற நேரங்களில் இரத்த பரிசோதனை மிகவும் உதவும்.

அடிக்கடி தலைவலி, முளையில் லேசான அல்லது வீரியம் அதிகம் கொண்ட வலி உங்களுக்கு ஏற்பட்டால் நரம்பு சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளை சில துளி இரத்தத்தை வைத்து அறிந்து கொள்ள இயலும். ஆகவே நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் ஒரே ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்.

உங்கள் மனைவி கர்ப்பமாக உள்ளாரா என்பதை சிறுநீரை வைத்து கண்டறிய ஓரிரு நாட்கள் எடுத்து கொள்ளும். ஆனால், சில துளி இரத்தத்தை வைத்து நம்மால் மிக சுலபமாக கருத்தரிப்பில் உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

சர்க்கரை வியாதியினால் இன்று பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். வெறும் ஓரிரு துளி இரத்தத்தினால் உடலில் எவ்வளவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளது என்பதை கண்டறியலாம். 6.4 அளவுக்கு மேல் இவை இருந்தால் சர்க்கரை நோயின் அறிகுறிகள் உங்களுக்கு உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.