தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

“வேலூர் தொகுதி தேர்தல் ரத்து – தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையக் கோட்பாடு பிரதமர் நரேந்திர மோதியின் காலில் மிதிபட்டு கிடக்கிறது – ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை நீங்களே உருவாக்கி விட வேண்டாம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.