வேலை இல்லாமல் வேலையை தேடி அலையும் வி.ஐ.பி-க்கள் அதிகம் என்பது உண்மை தான். என்றாலும் வேலையில் உள்ள சில நபர்கள் எப்போதுமே பிசியாகவே இருப்பார்கள். அல்லது பிசியாக காட்டி கொள்வார்கள். என்னப்பா பண்ணுற? அப்படினு கேட்டா, பலரின் தற்போதைய பதில் ‘பிசியாக இருக்கேன்’ என்பது தான். இப்படிப்பட்ட பதில்கள் நம்மை எரிச்சல் அடைய செய்தாலும் பல சமயங்களில் இது உண்மையாகவும் உள்ளது.

நாம் சும்மா இருந்தாலோ அல்லது வேலையில் இருந்தாலோ சில விஷயங்களை செய்யவே கூடாது. முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் நாம் உஷாராக இருத்தல் அவசியமானது. வேலை நேரங்களில் வேலையை விட பலர் நொறுக்கு தீனிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவ்வாறு நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடியதாக இருக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வேலை நேரத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் மோசமான பக்க விளைவு உண்டாகும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

பலருக்கு இது போன்ற பருப்பு வகைகளை வேலை நேரத்தில் கொறிப்பது மிகவும் பிடிக்கும். வேர் கடலை சிறந்த உணவு தான். என்றாலும், இதனை வேலை நேரத்தில் சாப்பிட்டால் கலோரிகள் கூடி விடும். அரை கப் வேர்க்கடலையில் சுமார் 430 கலோரிகள் உள்ளது. ஆதலால், இது உடல் பருமனை அதிகரிக்கும்.

நேரம் காலம் தெரியாமல் காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. வேலை நேரத்தில் அதிக அளவு காபி குடித்தால் அது மோசமான பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக செரிமான கோளாறு, பசியின்மை, உடல் எடை முதலிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். 1 நாளைக்கு 1 கப் காபியே அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமும் 1 பிஸ்கட் பாக்கெட்டை காலி செய்யும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், இது போன்ற உணவுகள் சுவையை தந்தாலும் உங்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், பசியின்மை போன்றவை இதனால் கிடைக்கும் பாதிப்புகள்.

இது தற்போதைய ட்ரெண்ட் செட்டிங்காகவே உள்ளது. கையில் ஒரு மில்க்ஷேக் வைத்தே கொண்டே வேலையை பார்க்கின்றனர். ஆனால், இப்படிப்பட்ட பழக்கம் நமது உடல் நலத்தை பாதிக்கும். கூடவே கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் எடை, இதய பாதிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தொடக்க புள்ளியாக இருக்கும்.

தூக்கம் வர கூடாது என்பதற்காக இந்த சாக்லேட் ஆயுதத்தை பலரும் கையில் எடுத்து கொள்வார்கள். ஆனால், கோக்கோ அதிகம் நிறைந்த சாக்லேட்டுகளை தவிர மற்ற சாக்லேட்டுகள் உடலுக்கு தீங்கு தருபவை. குறிப்பாக கலர் கலராக உள்ள மிட்டாய்களை சொல்லலாம். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். எனவே, மேற்சொன்ன உணவுகளை வேலை நேரத்தில் தவிர்ப்பது உங்கள் உடலை நோய்கள் இல்லாமல் வைத்து கொள்ளும்.