ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், ஏப்ரல் மாதத்தில் பிரம்மாண்ட ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரண்டாவது முறையாக வெற்றிகரமான விண்கலத்தை விண்ணில் செலுத்தியவருமான எலன் மஸ்க், இந்தாண்டு சயின்ஸ் கம்யூனிகேஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.

பிரபலமான விஞ்ஞானி மற்றும் அண்டவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், அவரது 76 வயதில் காலமானதிற்கு பிறகு ஓராண்டு கழித்து அவரின் பெயரில் வழங்கப்படும் இந்த ‘2019 ஸ்டீபன் ஹாக்கிங் மெடல் ஃபார் சயின்ஸ் கம்யூனிகேஷன்’ விருதை எலன் மஸ்க் பெறவுள்ளார். இந்த விருதானது ராக் ஸ்டார் ஆஸ்ட்ரோபிஸ்டிஸ்ட் பிரையன் மே அவர்களின் கைகளால் வழங்கப்படவுள்ளது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நிறுவிய எலன் மஸ்க், இன்னும் பல்வேறு மார்ஸ் ராக்கெட் கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் பணிபுரிகிறார். மேலும் அவர் மறுபயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட்கள், விண்வெளி பயணத்தின் செலவுகளை குறைக்கக்கூடிய விண்கலன் மற்றும் மார்ஸ் மிஷன் போன்றவற்றில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

எலன் மஸ்க் மற்றும் பிற விருது பெறுநர்கள் ஜூன் 24 அன்று ஜூரிச்-ல் நடைபெறவுள்ள ஸ்டார்மஸ் வி சயின்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திருவிழாவில் தங்கள் பதக்கங்களை பெறுகின்றனர். அறிவியல் தொலைக்காட்சி ஆளுமையான் பில் நியே இந்த நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். அப்போலோ 11 விண்வெளி வீரர் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் மற்ற ஆறு அப்பல்லோ விண்வெளி வீரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.