விவோ நிறுவனம் எப்போதும் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி விரைவில் விவோ இசெட்-சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக பாப்-அப் செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்.

விவோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் முதல் ஸ்னாப்டிராகன் 712சிப்செட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வதிகளுடன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். அதேசமயம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியை விட ஓரளவு வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

விவோ நிறுவனம் கொண்டுவரும் ஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதி பொறுத்தவரை கேமிங் செயல்திறன் மற்றும் 4கே டிஸ்பிளே போன்ற அம்சங்களுக்கு மிகவும் அருமையாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அட்ரினோ 616ஜிபியு வசதி உடன் வருவதால் போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் குவால்காம் ஆக்டோ-கோர் போன்ற மென்பொருள் ஸ்மார்ட்போனை வேகமாகவும், இயக்கத்திற்கும் தகுந்தபடி வைத்திருக்கும் வகையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களில் விவோ இசெட்- சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு இந்த ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக ஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதி இருக்குமென்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இசெட்- சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.