தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் இடம்பெற்று நீங்கா நினைவுகளுடன் என்று பதிவிடப்பட்டுள்ளது.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை கிட்டத்தட்ட ரூ.40 கோடி செலவில் தயாரித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இப்படத்தின் மூலம் நடிகை வித்யா பாலன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதுவும், தல அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார். மேலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தாரங்க், அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், கல்கி கோச்சலின், ரங்கராஜ் பாண்டே, பிரியதர்ஷினி ராஜ்குமார், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.