சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் வியக்கவைக்கும் விலையில் தரமான மென்பொருள் மற்றும் வன்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக 10.5-இன்ச் WQXGA சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560×1600 பிக்சல் திர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் எஸ்-பெண் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம்.

கேலக்ஸி டேப் எஸ்6 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 640ஜபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தில் 13எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி செகன்டரி கேமரா என டூயல் ரியர் கேமரா வசதி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தின் விலை ரூ.59,990-ஆக உள்ளது, மேலும் 7040எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாகை வைஃபை, யுஎஸ்பி போர்ட், 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.