ரூ. 100 கோடி வசூலைக் கடந்த ஆறாவது படமாக விஜய்க்கு சர்கார் அமைந்துள்ளது.

சர்கார் திரைப்படம் துவக்கமே படக்குழுவுக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் விமர்சனம் எழுந்து வரும் நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் இரண்டே நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மிகவும் வேகமாக இந்த பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை சர்கார் பெற்றுள்ளது. மேலும், 100 கோடி வசூலைக் கடந்த ஆறாவது படமாக விஜய்க்கு சர்கார் அமைந்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான படங்களில் சர்கார் படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ. 65-70 கோடி வசூலை தொட்டுள்ளது. இரண்டாம் நாளில் தமிழகத்தில் இந்தப் படம் ரூ. 20-23 கோடி வசூலைத் தொட்டுள்ளது. தமிழகத்தில் முதல் நாளிலேயே இந்தப் படம் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலை எட்டி இருந்தது.

கபாலி படம் தான் இதுவரை தமிழில் வெளியான படங்களில் இரண்டாவது நாளில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதையடுத்து தற்போது சர்கார் படம் சாதித்துள்ளது. இந்த இரு படங்களை அடுத்து பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டே நாளில் 100 கோடி வசூலைக் கடந்து இருந்தது.

விஜய் நடித்த படங்களில் துப்பாக்கி 15 நாட்களில், கத்தி 12 நாட்களில், தெறி 6 நாட்களில், பைரவா 4 நாட்களில், மெர்சல் 3 நாட்களில் 100 கோடியைக் கடந்து இருந்தது. மெர்சல் படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 2.37 கோடி வசூல் செய்து இருந்தது. தொடர்ந்து இந்தப் படம் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.