உலகின் மிகவும் வயதான தொழிலதிபராகத் திகழும் சங் யுன் சுங் 100 வயதிலும் ஒவ்வொரு நாளும் தனது தொழில் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சங் யுன் சுங் கடந்த மார்ச் மாதம் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். சுமார் 1.9 பில்லியன் டாலர் சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார்.

பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் என்ற சரக்குக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் நிறுவனர். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பேசும்போது, “தினமும் நான் செய்ய வேண்டிய பணிகளை என் டைரியில் எழுதி வைத்துக்கொள்வேன். எல்லா பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் என்னைப் பார்க்க வருவார். அப்போது நான் வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது. அது எனக்கு மிக மிக அலுப்பூட்டும் விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.
சரக்குக் கப்பல் போக்குவரத்தில் பல எதிர்பாராத சிக்கல்கள் நேரும் எனவும் அரசியல் விவகாரங்களும் தொழில்நுட்பக் கோளாறுகளும் தலையெடுக்கும். விபத்து ஏற்படக்கூடும். அனைத்திலும் பொறுமையாக இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் அவரிடமிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்.” என சங் யுன் சுங்கின் மகன் தியோ சியோங் செங் கூறுகிறார்.