சீனாவின் சிறிய வீடியோ பயன்பாட்டு செயலியாக டிக்டாக் இருக்கின்றது. இந்தியாவில் 1.5 ஆண்டுகளில் 1,35000 வீடியோக்களை தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தாய் நிறுவனமான பைடான்ஸ் மத்தியஅரசிடம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கணக்குகளையம் நீக்கியுள்ளது.

2017 ஜனவரி, ஜூன் 2019 இடைப்பட்ட காலத்தில் டாக்டாக் பொதுமேடையில் ஏராளமான பாலியல், ஆபாச காட்சிகள், தனிநபர் தாக்குதல் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 1.7 மில்லியன் புகார்களும் பெறப்பட்டது. இது தொடர்பான 134,844 வீடியோக்களையும் நீக்கியது.

டிக்டாக்கில், பதிவான 700,257 கணக்குகளில், 181,926 நிரந்தரமாக தடை செய்யப்பட்டன. தற்போது, ​​இந்தியா 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட டிக்டாக்கின் மிகப்பெரிய சந்தையாகும். அமெரிக்கா இரண்டாவது பெரிய சந்தையாகும்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும், ஆனால் அவ்வாறு செயல்படுவதாகவும் டிக்டாக் கூறியது.