சென்னை: 2.0 படம் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது.

அதன் பிறகு அடுத்த நாளே ரூ. 200 கோடி வசூலித்தது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது 2.0

2.0 படம் ரிலீஸான ஒரே வாரத்தில் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.