இந்தாண்டு நடைப்பெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியைப் போலவே, 2008ல் U 19 உலகக் கோப்பையிலும் நடைப்பெற்றது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

2008ம் ஆண்டு நடந்த U 19 உலகக் கோப்பை தொடரின் போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதி உள்ளது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா மழை காரணமாக 43 ஓவராக குறைக்கப்பட்ட 191 ரன் இலக்காக வைக்கப்பட்டது.

இதில் விராட் கோலி 43 ரன் உதவியால் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதே போல் தற்போது 2019 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்தியா, வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.