கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்கள்அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளன. நமது அன்றாட வேலைகளை எளிதாக செய்யும் ‘ டிஜிட்டல் துணை’யாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், மொபைல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மேம்பாடுகளால் தொடர்ந்து மாற்றமடைந்துகொண்டே வருகின்றன.

மோனோக்ரோம் 3இன்ச் திரை, 128எம்பி சேமிப்புதிறன், கேமரா இல்லாத அல்லது விஜிஏ ஸ்னாப்ர் கொண்ட மொபைல் பயன்படுத்திய நாட்கள் நினைவில் வருகிறதா? தற்போதுள்ள மொபைல்களை கொஞ்சம் பாருங்கள். 6இன்ச் அளவில் மிகப்பெரிய திரை, ஜிகாபைட்களில் சேமிப்புதிறன், டிஎஸ்எல்ஆர் கேமராவுடன் போட்டிபோடும் கேமரா என அசத்துகின்றன. ஸ்மார்ட்போனின் பரிமாணவளர்ச்சியில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நமது சட்டைப்பையில் உள்ள இந்த சிறிய கருவி, இன்று தொலைதொடர்பு கருவி என்பதை காட்டிலும் அதிகளவில் பயன்படுகிறது என்பதை மறுக்கமுடியாது. இந்த உலகுடன் நாம் இணையவும், நமது உணர்ச்சிகளை வார்த்தைகளாக, படங்களாக, வீடியோவாக, ஜிப் மற்றும் எமோஜிக்களாக வெளிப்படுத்தவும் உதவும் இவை, நவீன டிஜிட்டல் உதவியாளராக பணியாற்றுகின்றன. மேலும் புதிய டிரெண்டுகளை உருவாக்கவும், நமது கலாச்சாரத்தை கட்டமைப்பதிலும் கூட முக்கிய பங்காற்றுகின்றன. இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் உற்சாகமான வேளைய ல், கற்பனைக்கும் எட்டாத தொழில்நுட்பங்கள் யாவும் நிஜமாகியுள்ளன.

ஆனால் இந்த மேம்படுத்தல்களால், எப்போதும் புதியவற்றை எதிர்பார்க்கும் நுகர்வோர்களை திருப்திபடுத்துவது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் கடினமாகியுள்ளது. தற்போதுள்ள போட்டியில் முன்னணியில் வர ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் எதையாவது கூடுதலாக எதிர்பார்க்கின்றனர். இயங்குதளம், செயற்கைநுண்ணறிவு கேமரா, ஜீரோ பேசில் என புதியவற்றை எதிர்பார்க்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள இளம் நுகர்வோர்களிடையே புதுமையை படைக்கும் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் விவோ, 2018ல் ஆகச்சிறந்த நவீன மொபைல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி முன்னணியில் இருக்கிறது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய உலகின் முதல் எலிவேடிங் முன்புற கேமரா லைம்லைட்டில் உள்ளது. அதே கருவி எப்படி மெசின்லேர்னிங் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் காட்டியுள்ளது. 2018 முழுவதும் ஆச்சர்யமளித்த ஆண்டாக இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டும் எலிவேடிங் முன்புற கேமரா போன்ற வளரும் டிரெண்ட்களுடன் பிரமிக்கத்தக்க ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ல் தனது நுகர்வோர்களுக்காக விவோ என்னென்ன நவீன புதுமை அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது என பார்ப்போம்.

இன்றைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் செல்ஃபி வசதிக்காக முன்புற கேமராக்கள் இடத்தை ஆக்கிரமித்து போனின் அழகையும் பாதித்து, திரையின் அளவையும் குறைக்கின்றன. பயனர்கள் முழு திரை அனுபவத்தை பெறும்வகையில், விவோ பொறியாளர்கள் முன்புற கேமரா திரைக்கு அடியில் இருப்பது போல வடிவமைத்துள்ளனர். இந்த எலிவேடிங் கேமரா உள்ள விவோ நெக்ஸ் ஜூன் 2018ல் வெளியானது. செல்ஃபி எடுக்கும் போது தானாகவே வெளியே வந்து புகைப்படம் எடுத்தவுடன் பாதுகாப்பாக உள்ளே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2019லிலும் நடுத்தர ஸ்மார்ட்போன்களில் பேசில் லெஸ் நோட்ச் ப்ரீ வகையில் புதுமைகளை எதிர்பார்க்கலாம்.

பேசில் லெஸ் டிசைன்களை தவிர்த்து, ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சிறப்பான புகைப்படங்களை வழங்குவதிலும் கவனம் செலுத்துகின்றன. 2018 ல் விவோ போன்ற பிராண்டுகள் 8 முதல் 24மெகாபிக்சல் வரையிலான கேமரா உள்ள போன்களை அறிமுகப்படுத்தியதை பார்த்தோம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு செல்ஃபி என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதிக தரம்வாய்ந்த சிறந்த புகைப்படங்களை எடுக்கும் வகையில் உயர் மெகாபிக்சல் கொண்ட கேமரா போன்களை 2019ல் எதிர்பார்க்கலாம்.