2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 4 மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடம் முதல் 4 மாத காலத்திற்கான அரச செலவுக்கென 1,474 பில்லியன் ரூபாவிற்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் இன்று (23) சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் செலவிற்கு மேலதிகமாக அடுத்த வருடத்தில் முதல் 4 மாதத்தில் கடனை செலுத்துவதற்கான வரையறையாக 721 பில்லியன் ரூபாவிற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.