நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் இன்று (18) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் செயலாளர், டொக்டர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணிமுதல் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளோம். வழமையான நடைமுறையின் பிரகாரம், மகப்பேற்று வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலைகளில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது

என வைத்தியர் ஹரித அளுத்கே கூறியுள்ளார்.