பேஸ்புக்கில் ஏராளமானோர் போலி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலும் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து, மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பேஸ்புக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையும் நிலவுகின்றது.

இவற்றுள் கடந்த அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது.

மேலும் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.