கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.

இந்திய மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும், கடந்த இரு மக்களவை தேர்தல்களின்போது (2009, 2014), ஐபிஎல் போட்டிகளைக்கூட நடத்த முடியவில்லை. அரசாங்கம் வலுவாக இருந்தால், ஐபிஎல், ரம்சான், பள்ளித் தேர்வுகள் என அனைத்தும் அமைதியாக நடக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.