இலங்கைத்தீவை மையப்படுத்திய ஒலித்த ஒரு பரபரப்பு வினாவுக்கு விடைகிட்டிவிட்டது. ஆம் எதிர்வரும் திங்கள் அன்று சிறிலங்கா நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது
5ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டபடுவதை மைத்திரி சொன்னதாக மஹிந்த சொல்லியுள்ளார்.

மகிந்தவை கொலுவேற்றிய மைத்திரியின் நகர்வு ஜனநாயக விரோத செயற்பாடாகவும் நாட்டின்அரசியலமைப்பை மீறிய அடாவடியாகவும் உள்ளுரிலும் அனைத்துலக ரீதியிலும் நோக்கபட்ட நிலையில் இந்த செய்திவந்தது
நேற்று மைத்திரிக்கும் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பில்…
நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனத்தை ஒதுக்க சபாநாயகர் உடன்;பட்டபின்னர் இந்த முடிவு எடுக்கபட்ட கதை வேறுகதை.
சரி எதிர்வரும் திங்கள் அன்று நாடாளுமன்றம் கூட்டப்போகின்றது. அன்று கூச்சல் குழப்பங்கள் உருவாக கூடும்.

எனினும் பழையவர் ரணிலும் புதியவர் மகிந்தவும் தாம் உரிமைகோரிக்கொள்ளும் பிரதமர் பதவியை மைய்பபடுத்தி பலப்பரீட்சை செய்து பெரும்பான்மையை நிருபிக்கவேண்டியமை யதார்த்தம்
இந்தநிலையில் 5ஆம் திகதி அமர்வு என மஹிந்தவே சொல்வதால் ஒன்றில் குதிரைபேரங்கள் ஊடாக அவருக்குரிய பெரும்பான்மை பலம் உறுதிப்பட்டிருக்கவேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் இந்த அரசியல் குழப்பங்களுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதேர்தல் ஒன்றுக்கு அழைப்புவிடுக்கும் சாத்தியங்கள்உள்ளன
அதுவுதட் இல்லையெனில் ரணிலை ஐக்கியதேசியக்கட்சியின் தலைமையில் இருந்து வீழுத்துங்கள்; அதன்பின்னர் (ரணில் அற்ற) புதிய நல்லாட்சிகுறித்து சிந்திக்கலாம் என யானை முகாமில் உள்ளக குழப்பம் ஒன்றை உருவாகும் வகையில் மைத்திரி மகிந்த தந்திரம் வெளிப்படலாம்.

இதற்கிடையே மகிந்தவை சந்திக்க நேரம் ஒதுக்காமல் பெரியண்ணன் வீட்டு உயர்ஸ்தானிகர் டிமிக்கி கொடுத்துவருவதாக செய்திகள் உலாவினாலும் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் பெரியண்ணன் வீட்டு பிரதிநிதியும் கலந்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு வேளை எதிர்வரும் திங்கள் நாடாளுமன்றத்தில் ரணில் தனது பெரும்பான்மையை நிருபித்தால் என்ன நடக்கும்?
அதற்கும் மைத்திரி விடைசொல்லியுள்ளார்.
ரணில் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி கதிரையில் ஒரு மணிநேரமேனும் இருக்கமாட்டேன் எனத் தெரிவித்த அவர் வடக்கு- கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு அல்லது தமிழர்களுக்கு சமஸ்டியை வழங்குவதற்கோ தான் ஜனாதிபதி கதிரையில் இருக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார்.

ஆகையால் வடக்கு- கிழக்கை மீண்டும் இணைக்க அல்லது சமஸ்டியை வழங்கவேண்டுமாயின் முதலில் தன்னை கொல்லவேண்டுமெனவும் சூளுரைத்தவர் தன்னைகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி அம்பலமாகியிருப்பதால் மஹிந்தவும் தானும் மிகவும் அவதானமாக செயற்படவேண்டியுள்ளதாக சிறிலங்கா சுதந்தரக்கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
ஆகமொத்தம் இறுதியில் மிகமோசமான தமிழர்விரோதப்போக்குக்குரிய வாளை சுழற்றிய மைத்திரி தனது இன்னொரு தவணைக்குரிய பெருந்தேசிய வாக்குகளுக்கும் முஸ்லிம் வாக்குகளுக்கும் அச்சாரம் போட்டுவிட்டார்
மைத்திரியின் இந்தகருத்து அவருக்கு வாக்களிக்கச்செய்து அவரது நல்லாட்சியில் புதியஅரசியலமைப்பு மழை பொழிந்து தீர்வு முளைவிடும் என எதிர்பார்த்த முகங்களின் மீது ரசாயன மழையாக பொழியக்கடவது.
கொழும்பு அதிகாரமையத்தில் ஒருவர் தனது அரசதலைவர் ஆசனத்தை சூடாக்க தமிழ்பேசும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் அந்த ஆதரவுடன் அரங்கேறும் அதேமுகம் அதே ஏணியை குப்புறக்கவிழ்த்து குழியை பறிக்காது என்பதற்கு யாதொரு உத்தரவாமும் இல்லை. இதனை இப்போது மைத்திரியும் நிருபித்துவிட்டார்
இந்தப்படிப்பினைகளுடன் இலங்கையின் இப்போதைய அரசியல் குழப்பங்களிலாவது தமிழர்தரப்பு கனதி அரசியல் செய்யுமா? இரட்டைமுகங்கள் ( இரா.சம்பந்தன் சுமந்திரன்) தனித்து தீர்மானம் எடுக்கும் அரசியல் தவிர்க்கப்படுமா? இல்லையென்றால் பழைய குருடி கதவை திறவடி நிலைதானா?
நீங்கள் நினைப்பது என்ன?