ஸ்கைப் வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் செல்போனின் திரையில் தெரியும் தகவல்கள், செட்டிங்க்ஸ்களை இனி நேரலையாக உங்கள் நண்பருக்கு காட்டலாம்.

வீடியோ கால் ஆப்பில் முன்னனி நிறுவனமாக ஸ்கைப் இருந்தாலும், அதற்குப் போட்டியாக பல ஆப்கள் வரத்தொடங்கிவிட்டது. இதனால் பயனாளர்களை கவரும் விதமாக ஸ்கைப் நிறுவனம் புதுப்புது அப்டேட்டுக்களை வழங்கி வருகிறது. குறிப்பாக அண்மையில் 50 பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால் செய்யும் வசதி கொண்டு வந்தது பெரும் வரவேற்பை பெற்றது.

அந்தவகையில், தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளத்தில் ஸ்கைப் மூலம் வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ஸ்கைப்பை அப்டேட் செய்வதன் மூலம் பயனாளர்கள் பெற முடியும்.

ஸ்கைப்பில் வீடியோ கால் செய்யும் போது, அடிப்பக்கத்தில் மூன்று புள்ளிகள் ஆப்ஷன் காட்டப்படும். அதனை க்ளிக் செய்தால், ஸ்கிரீன் ஷேர் செய்யலாமா என்று திரையில் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதை ஒகே கொடுப்பத்தால் போதும். உங்கள் செல்போனின் திரை இனி மறுமுனையில் இருப்பவர்களுக்கு அப்படியே தெரியும். இதன் மூலம் உங்கள் போனில் உள்ள தகவல்கள், செட்டங்ஸ் போன்றவற்றை மறுமுனையில் இருக்கும் உங்கள் நண்பருக்கு சுலபமாக காட்டலாம். இந்த சேவைக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக ஸ்கைப் நிறுவனம் சோதித்து வந்தது குறிப்பிடத்தக்கது.